ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அரசுப் பள்ளிக்கு செல்லும் பாதையை மதுப்பிரியர்கள் ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்லும் பாதையை ஆக்கிரமிக்கும் மதுப்பிரியர்கள், அங்கேயே மதுபாட்டில்களை உடைத்து போட்டுவிட்டு செல்கின்றனர்.
இதனால் அவ்வழியாக பயணிக்க மாணவிகள் அச்சமடைந்துள்ள நிலையில், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.