உக்ரைனுக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்ப தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் அமைதிப் பேச்சு நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பின்றி அமைதிப் பேச்சு மேற்கொள்ள அமெரிக்காவும் ரஷ்யாவும் தயாராகி வருகின்றன. இந்த பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கவலை தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர், உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு என்பது, ஐரோப்பாவின் பாதுகாப்பை போன்றது என தெரிவித்துள்ளார்.
மேலும், ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளின் படைகளும் அங்கு களம் இறக்கப்படும் பட்சத்தில், மீண்டும் ஒருமுறை உக்ரைனை தாக்குவதற்கு புதின் தயங்குவார் என தெரிவித்துள்ளார்.