மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிப்ரவரி 25-ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக 25-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வரவுள்ளார்.
அதைத்தொடர்ந்து, கோவையில் நடைபெறும் கட்சி நிகழ்வில் பங்கேற்கவுள்ள அமித் ஷா, ராமநாதபுரம், திருவண்ணாமலை, கோவை உட்பட 5 மாநில பாஜக அலுவலகங்களை காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.