திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் ஆட்டோவில் வந்து தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2 மாதங்களாக வாணியம்பாடி ஜீவா நகரில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் ஆடுகள் திருடுபோயின. இந்நிலையில் கே.வி குப்பம் சந்தையில் திருடப்பட்ட ஆடுகளை விற்க முயன்ற தம்பதியை, பாதிக்கப்பட்டவர்களே கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் அடுக்கம்பாறையை சேர்ந்த சபரி – நிஷா என்பதும், ஆட்டோ மூலம் ஆடுகளை திருடி விற்றதும் தெரியவந்தது.