சிவகங்கை அருகே மளிகை கடை உரிமையாளரை திமுக நிர்வாகிகள் மதுபோதையில் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் ராம்நகர் எழுவன்கோட்டை சாலையில் சரவணன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை உள்ளது. இங்கு மதுபோதையில் வந்த திமுக நிர்வாகிகள் அப்துல் ஜாபர், லெட்சுமணன் ஆகியோர் இலவசமாக பொருட்கள் கேட்டுள்ளனர்.
அப்போது மளிகை பொருட்களை இலவசமாக தர மறுக்கவே ஆத்திரமடைந்த திமுக நிர்வாகிகள் சராமாரியாக கடை உரிமையாளரை தாக்கினர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், தேவகோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி கௌதம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.