ஆவடி இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த ஆவடி பட்டாபிராம் பகுதியில் கடந்த ஜனவரி 18-ம் தேதி, ரெட்டைமலை மற்றும் அவரது சகோதரர் ஸ்டாலின் ஆகியோர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
ஆயில்சேரி வழியாக சென்ற சோரான்சேரி இளைஞர்களை, சகோதரர்கள் ரெட்டைமலை மற்றும் ஸ்டாலின் ஆகியோர் தாக்கியதால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை நடந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், குற்ற சம்பவத்தை தடுக்க தவறிய காவல் ஆய்வாளர் ஜெகநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், தற்போது இரட்டை கொலை சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அதில் ஸ்டாலினை கொலைக்கும்பல் துரத்தி துரத்தி வெட்டுவதுடன், அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளன.