ஜம்மு- காஷ்மீரில் மூன்று குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஜம்மு- காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதலமைச்சர் ஒமர் அப்துல்லா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பழைய குற்றவியல் சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதி சாட்சிய அதினியம் ஆகிய மூன்று சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.