விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் : அண்ணாமலை
Sep 12, 2026, 10:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் : அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Feb 18, 2025, 06:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தோல்வி அடைந்து விட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக சென்னை கமலாலயத்தில்

இது தொடர்பாக சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு அவரளித்த பேட்டியில்,

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் மார்ச் 1-ம் தேதியில் இருந்து 90 நாட்களுக்கு மும்மொழிக் கொள்கை குறித்து கருத்து கேட்டு கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்றும் மும்மொழி தொடர்பாக கணக்கு எடுத்து குடியரசு தலைவருக்கு அறிக்கை கொடுக்க உள்ளோம் என  அண்ணாமலை தெரிவித்தார்.

தாய்மொழிக்கு முன்னுரிமை வழங்குவதே புதிய கல்விக் கொள்கையின் சிறப்பு என்றும் தமிழகத்தில் இந்தி எங்கேயும் திணிக்கப்படவில்லை; திணிக்கவும் மாட்டோம்  என  அண்ணாமலை விளக்கம் அளித்தார்.

3-வது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழியை படிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறோம்,  மும்மொழி கொள்கை என்றால் இந்தி திணிப்பு கிடையாது என தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கை குறித்து திமுகவினர் தவறான பிரச்சாரத்தை செய்வதாக அண்ணாமலை குற்றச்சாட்டினார்.

விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் என்றும் எஸ்.ஏ.சந்திரசேகரின் அறக்கட்டளை பெயரில் விஜய்யின் பள்ளி நடத்தப்படுவதாக அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 30 லட்சம் பேர் மும்மொழி கல்வியை படிக்கின்றனர் என்றும்  நான் கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்று அரசு கூறுவது வெட்கக்கேடானது என்று அண்ணாமலை தெரிவித்தார்.

“அரசு பள்ளியை விட தனியார் பள்ளி மாணவர்கள் அதிகம் இருப்பதால் இரு மொழிக்கொள்கை தோற்றுவிட்டது  என தெரிவித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஸின் மகன் தனியார் பள்ளியில் பிரெஞ்சு மொழி படிக்கிறார் என்றும் அன்பில் மகேஸ் குழந்தைக்கு ஒரு நியாயம், அரசு பள்ளி குழந்தைகளுக்கு ஒரு நியாயமா? என  அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

தனியார் பள்ளிகளுக்காக அரசு பள்ளிகளை  அழிக்கிறார்கள் என்றும்  மாணவர்கள் தனியார் பள்ளியை நோக்கி செல்ல வேண்டும் என்பதற்காக இரு மொழிக்கொள்கை என அண்ணாமலை தெரிவித்தார்.

விகடன் இணையதளத்தை முடக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் பிரதமர் கையில் விலங்கு போட்டு டிரம்ப் அருகில் அமர்வது போல சித்தரிப்பது கருத்து சுதந்திரமா?  என  அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

“முதல்வருக்கு விலங்கு போட்டு, பக்கத்தில் மதுக்கடை ஒன்றை வைத்து கார்ட்டூன் போட்டால் முதல்வர் விட்டு விடுவாரா?” என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் யார் அந்த சார் என்ற விவகாரத்தில் 100% மா.சுப்பிரமணியன் உண்மையாக நடந்து கொள்ளவில்லை என அண்ணாமலை குற்றச்சாட்டினார். SIT விசாரணை முடியும்போது 100% ஆதாரங்களுடன் யார் அந்த சார் என்பதை வெளியிடுவேன் என அண்ணாமலை தெரிவித்தார்.

Tags: Thaveka leader Vijay runs a CBSE school named Vijay Vidyasram : AnnamalaiDMKbjp k annamalaitvk vijaynew education policy
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் : நவீன யுகத்தின் தெய்வீகக் குரு!

Next Post

குற்றவியல் சட்டம் : அமித் ஷா தலைமையில் ஆலோசனை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies