திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ளக்கூறி பிற்படுத்தப்பட்ட சமூக மக்களை போலீசார் அடித்து துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பல்லடம் அடுத்த அவிநாசிபாளையத்தில் கடந்த நவம்பர் மாதம் 28-ஆம் தேதி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டு 8 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களை குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி காவல்துறையினர் மிரட்டுவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பழவஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்த ஹரிதாஸ் என்பவரை தனியாக அழைத்து சென்ற போலீசார் 5 லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறி குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த ஹரிதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி புகார் மனு அளித்தனர்.