ஆளுநர் விவகாரத்தில் எழுத்துப்பூர்வமான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் 12 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகவும் அவற்றின் மீது முடிவெடுக்காமல் உள்ளதாக கூறி, 2023-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடா்ந்தது.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, ஆளுநருக்கு எதிரான வழக்கில் எழுத்துப்பூர்வ வாதங்களை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதன்படி, ஆளுநர் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவேதி, பி.வில்சன் ஆகியோர் எழுத்துப்பூர்வ வாதங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், அரசியல் சாசனப்படி ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும்,அரசியல் சாசனத்துக்கு எதிராக ஆளுநர் குடியரசு தலைவருக்கு மசோதாக்களை அனுப்பியது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்துள்ளது.