புதுச்சேரியில் மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி சத்யாவின் காதலி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 14ஆம்தேதி புதுச்சேரி ரெயின்போ நகர் பகுதியில் பாழடைந்த வீட்டில் வைத்து 3 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மூன்று தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், ரவுடி சத்யாவின் காதலி சுமித்ரா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ஆபிரகாம், ஹரிஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே ரவுடி சத்யா உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். யுபிஐ மூலம் ரவுடி சத்யாவிற்கு பணம் அனுப்பியது தொடர்பாக அவரது காதலியை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.