கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நடைபெற்ற கலாச்சார விழாவில் ஹமாஸ் தவைர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்காட்டில் ஆண்டு தோறும் கலாச்சார விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 16ஆம் தேதி மாலை நடைபெற்றது. அப்போது யானைகள் ஊர்வலத்தில் ஹமாஸ் தவைர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது.
இது சமூக ஊடகங்களில் சூடான விவாதங்களுக்கு வழிவகுத்து;ள்ளது. சிலர் இந்த நிகழ்வு ஒரு மத விழாவுடன் தொடர்புடையது என்றும், இதுபோன்ற பதாகைகளை அனுமதித்ததற்காக ஏற்பாட்டாளர்களை கேள்வி எழுப்பினர்.
இந்த விழாவில் எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான ராஜேஷ் மற்றும் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.டி. பல்ராம் ஆகியோர் பங்கேற்றது விவாதத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது.
ஓராண்டுக்கு முன்பு கேரளாவில் ஹமாஸ் தலைவர் ஒருவர் மெய்நிகர் முறையில் பங்கேற்ற பேரணிக்கு எதிராக பாஜக எச்சரிக்கை விடுத்ததாகவும் ஆனால் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
தற்போது, பாலக்காட்டில், ஒரு உருஸ் விழாவில், ஆயிரக்கணக்கானோரை கொன்ற பயங்கரவாதிகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இஸ்மாயில் ஹனியே மற்றும் யஹ்யா சின்வாரின் படங்கள் யானைகள் மீது ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விழாவில் அமைச்சர் ஒருவரும், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏவும் கலந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
முதல்வர் பினராயி விஜயன் ஏன் அமைதியாக உள்ளார் என்றும், நடவடிக்கை எடுங்கள் இல்லை என்றால் ராஜினமா செய்யுங்கள் என அவர் கூறியுள்ளார்.