தமிழ்நாடு தொல்லியல் துறையில் 95 இடங்கள் காலியாக உள்ளதால் அகழ்வாய்வு பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு தொல்லியல் துறையில் காலி இடங்கள் தொடர்பாக, வழங்கறிஞரும் சமூக செயல்பாட்டாளருமான மணி பாரதி, தகவல் பெறும் உரிமைச்சட்டத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஆர்.டி.ஐ., தமிழ்நாடு தொல்லியல் துறையில் மொத்தமுள்ள 253 பணியிடங்ளில், தற்பொழுது 158 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது என்றும், மீதுமுள்ள 95 இடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் சிவகங்கை கீழடி, அகரம் அகழாய்வு பணிகளுக்கு 28.48 லட்சம் ரூபாயும், கொந்தகை அகழாய்வு பணிக்கு 38.19 லட்சம் ரூபாயும், தூத்துக்குடி சிவகளைக்கு 32.94 லட்சம் ரூபாய் என மொத்தம் 99.62 லட்சம் ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது என்றும், இதுவரை செலவு செய்யப்பட்டுள்ள நிதி போதுமானதாக இல்லை எனவும் ஆர்.டி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது.