புதுச்சேரியில் பொது இடத்தில் பட்டா கத்தியுடன் நடனமாடிய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த சஞ்சய் என்பவர் அமரர் ஊர்தி ஓட்டி வருகிறார். இவர் மதுபோதையில் கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை எதிரே உள்ள உணவகத்தில் சத்தமாக பாடல் இசைத்து, பெரிய பட்டா கத்தியுடன் நடனமாடினார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.