சென்னை சைதாப்பேட்டையில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த கல்லூரி மாணவர்களின் 7 செல்போன்களை திருடிச்சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுப்பிரமணிய முதலி தெரு பகுதியில் கல்லூரி மாணவர்கள் சிலர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். இந்நிலையில் இரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் 7 செல்போன்களை திருடிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.