கன்னியாகுமரியில் முகமூடி அணிந்த கொள்ளையன் கோயில் மதில் சுவரை ஏறி குதித்து உண்டியலை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கருங்கல் அருகேயுள்ள பாலவிளை பகுதியில் பத்ரேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் பூசாரி நேற்று காலை வழக்கம்போல் கோயிலை திறந்தபோது, பொருட்கள் சிதறிக் கிடந்ததையும், உண்டியல் காணாமல் போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக கோயில் நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் போலீசார் சிசிடிவி காட்சியை கைப்பற்றி திருட்டில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.