வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் மருத்துவம் பயின்று இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற விரும்புவோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என இந்திய மருத்துவ கவுன்சில் பிறப்பித்த அறிவிக்கையை உறுதிசெய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
வெளிநாட்டு மருத்துவப் பல்கலைக் கழகங்களில் மருத்துவம் பயின்று இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற விரும்புவோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என தேசிய மருத்துவ கவுன்சில் கடந்த 2018-ஆம் ஆண்டில் அறிவிக்கை வெளியிட்டது.
இருப்பினும், முறையான சட்டத்திருத்தம் இன்றி இந்த அறிவிக்கையை தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்டதாக கூறி, அருணாதித்ய துபே என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை பரிசீலித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர், தேசிய மருத்துவ கவுன்சில் பிறப்பித்த அறிவிக்கை அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கோ அல்லது தேசிய மருத்துவ கவுன்சில் சட்டதிட்டங்களுக்கோ எதிரானது அல்ல என கூறினர்.
மேலும், வெளிநாட்டில் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களும் அதற்கான தகுதிச்சான்றிதழ் பெற வேண்டுமானால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட அறிவிக்கையை உறுதிப்படுத்தி உத்தரவிட்டனர்.