அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் பரிந்துரைப்படி அதிபர் டிரம்ப் எடுக்கும் முடிவுகளுக்கு மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், அரசின் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவராக எலான் மஸ்க்கை நியமித்தார். இதனை கண்டித்து நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், திரளான மக்கள் பதாகைகளை ஏந்தியவாறு நீண்ட தூரம் பேரணியாக சென்று தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.