காஞ்சிபுரத்தில் தனியாருக்கு சொந்தமான பழைய பொருட்கள் வைக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.
உத்திரமேரூரைச் சேர்ந்த மாருதிராஜுக்கு மலியங்கரணை பகுதியில் பழைய பொருட்கள் சேமித்து வைக்கும் குடோன் உள்ளது. இந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.
இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்த நிலையில், பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த உத்திரமேரூர் தீயணைப்பு துறையினர் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் 4 வாகனங்கள் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.