இந்தியாவில் முதன் முறையாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சி, நாகர்கோவிலில் நடைபெறவுள்ளதாக நிகழ்ச்சி ஒழுங்கிணைப்புக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் உள்ள பிரஸ் கிளப்பில் கர்மயோகினி சங்கமம் குழு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் வெள்ளிமலை விவேகானந்த ஜி மகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது சேவாபாரதி தென்தமிழகம் சார்பில் அமிர்தா பல்கலைக் கழக வளாகத்தில், மார்ச் 2-ம் தேதி கர்மயோகினி சங்கமம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மறைக்கப்பட்ட வரலாற்றை எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் நடைபெறவுள்ள இந்த சங்கமத்தில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்வில் மாதா அமிர்தானந்தமயி கலந்துகொண்டு ஆசியுரை வழங்க உள்ளதாகவும், பல பல்கலைக் கழக பேராசிரியர்கள் சமர்பிக்கும் கட்டுரைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.