ஒடிசா கல்லூரியில் நேபாள மாணவி சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கலிங்கா தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் நேபாளத்தை சேர்ந்த மாணவி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உண்மை கண்டறியும் உயர்நிலைக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை தடியடி நடத்தி விரட்டியதாக ஒடிசா கல்லூரியின் ஊழியர்கள் 3 பேர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் பல்கலைக்கழக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.