ஜனநாயக ரீதியில் போராடிய தமிழக பாஜகவினரை வலுக்கட்டாயமாகக் கைது செய்ததற்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
புதுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவிகள் ஏழு பேருக்கு, பள்ளி ஆசிரியரே பாலியல் தொந்தரவு கொடுத்ததைக் கண்டித்தும், தமிழகத்தில் பெருகி வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்காத திமுக அரசைக் கண்டித்தும், தமிழக பாஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜகதீசன் மற்றும் புதுக்கோட்டை மேற்கு மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில், ஆயிரக்கணக்கான தமிழக பாஜக சகோதர சகோதரிகள் இன்று போராட்டம் நடத்தினர் என தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றங்களைத் தடுக்காத திமுக அரசு, ஜனநாயக ரீதியில் போராடிய தமிழக பாஜக
சகோதர சகோதரிகளை வலுக்கட்டாயமாகக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று திமுக அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.