சென்னை அயப்பாக்கத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுகவினரே கோலங்களை வரைந்து, அதனை அப்பகுதி மக்களே வரைந்தது போல் சித்தரித்தது, தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கள ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
சென்னை அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில், சில வீடுகள் முன்பாக இந்தி திணிப்பை எதிர்த்தும், மும்மொழிக் கொள்கைக்கு எதிராகவும் கோலங்கள் போடப்பட்டிருந்ததாக சமூக வலைதளங்கள், ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பான உண்மை நிலவரத்தை அறிய தமிழ் ஜனம் தொலைக்காட்சி கள ஆய்வு நடத்தியது.
அப்போது இந்தி எதிர்ப்பு கோலங்களை தாங்கள் போடவில்லை என அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர். அப்பகுதியை சேர்ந்த சில ஆண்களிடம் கேட்டபோது திமுகவினர் தான் வீடு வீடாக கோலங்களை வரைந்து சென்றதாக தெரிவித்தனர்.
திமுகவின் போலி நாடகத்தை சுக்கு நூறாக உடைத்த தமிழ் ஜனம தொலைக்காட்சிக்கு
மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோபாலபுர ஊடகங்கள் ஒளிபரப்பும் பொய்களை ஊக்குவிப்பது, தமிழக முதல்வர் என்ற பதவிக்கு உகந்தது அல்ல என்பதை உணர்ந்தால் நன்று என்றும் அவர் கூறியுள்ளார்.