வாரணாசியில் சிக்கித்தவிக்கும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களை விமானம் மூலமாக சென்னை அழைத்துவர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த 6 வீரர்கள் கலந்துகொண்டனர். போட்டி முடிந்து சொந்த ஊர் திரும்புவதற்காக வீரர்கள் ரயில் நிலையம் வந்துள்ளனர்.
அப்போது ரயில்களில் கூட்டம் அலைமோதியதால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சிரமமடைந்தனர். தமிழகம் திரும்ப உதவி செய்யுமாறு விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், விமானம் மூலம் அவர்களை சென்னை அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.