தான் சி.பி.எஸ்.இ பள்ளி எதுவும் நடத்தவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பன்மொழிக் கொள்கையை விசிக வரவேற்ப்பதாகவும், இந்தி மொழி மீது விசிகவுக்கு வெறுப்பு இல்லை என்றும் கூறினார்.
தான் சி.பி.எஸ்.இ பள்ளி எதுவும் நடத்தவில்லை என்றும், தனது இடத்தில் மற்றொருவர் நடத்த உள்ளதாகவும் அவர் கூறினார். அதற்கான பெயர் மட்டும்தான் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தனது இடத்தில் நடத்தப்படுவதால் பெயரை பயன்படுத்தி உள்ளதாக திருமாவளவன் தெரிவித்தனர்.