புதுக்கோட்டை அருகே ஒருமையில் பேசியதாக கூறி பெண் ஒருவர் அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் இருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் மீன் கூடை ஏற்றி சென்ற பெண்ணை நடத்துனர் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் நடத்துனரை தாக்கியதாக தெரிகிறது. தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.