இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, கார் விபத்தில் சிக்கினார்.
துர்காபூர் விரைவு சாலையில் சென்றபோது எதிரே வந்துகொண்டிருந்த லாரி மீது கங்குலி சென்ற கார் மோத முயன்றது.
அப்போது ஓட்டுநர் பிரேக் பிடித்ததால் பின்னால் வந்துகொண்டிருந்த கார், கங்குலி சென்ற கார் மீது மோதியது. இதில் கார்கள் சேதமடைந்த நிலையில், காயமின்றி கங்குலி உயிர்தப்பினார்.