பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியில் இருந்து சிருஷ்டி டாங்கே திடீரென விலகியுள்ளார். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவாவின் பிரமாண்டமான நடன நிகழ்ச்சி, நாளை சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நடன நிகழ்ச்சியில் நடிகை சிருஷ்டி டாங்கே உள்பட பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நடிகை சிருஷ்டி டாங்கே தற்போது பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிருஷ்டி டாங்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன் எனவும், மரியாதை இல்லாத இடத்தில் தன்னால் வேலை செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார்.