டெல்லி ரயில் நிலைய கூட்டநெரிசல் வீடியோக்களை நீக்க X தளத்துக்கு இந்திய ரயில்வே நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் மகா கும்பமேளாவுக்குச் செல்ல டெல்லி ரயில் நிலையத்தில், கடந்த பிப்ரவரி 15-ம் தேதி இரவு அதிக பயணிகள் கூடினர். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.
சிறப்பு ரயில் வரும் பிளாட்பார்மை கடைசி நேரத்தில் மாற்றி அறிவித்ததும், வரம்புக்கு அதிகமாக பொது டிக்கெட்டுகளை விற்றதுமே கூட்டநெரிசலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கூட்ட நெரிசலின் வீடியோக்களைக் கொண்ட 285 சமூக ஊடக இணைப்புகளை குறிப்பிட்டு அதை நீக்குமாறு இந்திய ரயில்வே நோட்டீஸ் அனுப்பியுள்ளது.