ஹத்ராஸ் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சாமியார் போலே பாபா குற்றமற்றவர் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 2-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் சாமியார் போலே பாபாவின் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றவர்களில் 121 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகினர்.
இந்த சம்பவத்தை விசாரிக்க சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த ஆணையத்தின் அறிக்கையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாததே அசம்பாவிதத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் போலே பாபாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அவையில் தாக்கல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.