பறவை காய்ச்சல் எதிரொலியாக 3 மாநிலங்களில் இருந்து கோழிகள், முட்டை வாங்க கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான கோழிகள் பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறது.
இந்த நிலையில், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை வாங்க கர்நாடக அரசு, டீலர்களுக்கு தடை விதித்துள்ளது. பறவை காய்ச்சல் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கையாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.