பால் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்த கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த சில தினங்களாகவே அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. தற்போது கர்நாடகா அரசின் நந்தினி பால் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
நடப்பாண்டுக்கான பட்ஜெட் அடுத்த மாதம் 7ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அரசு அனுமதி பெற்று இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிகிறது. இதன் மூலம் 44 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் பாலின் விலை 47 ரூபாயாக அதிகரிக்கும்.
கடந்த 2022-ம் ஆண்டு பால் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், 2024-ம் ஆண்டு லிட்டருக்கு 2 ரூபாயும் அதிகரிக்கப்பட்டது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.