தமிழகத்தை இருளில் தள்ளிய திமுக அரசுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்பத் தொடங்கி உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
#GetOutStalin ஹேஸ்டேக் 10 லட்சம் பதிவுகள் தாண்டியதை எக்ஸ் தளத்தில் சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை, பிரதமர் மோடியின் ஆட்சியில் தான் வளர்ச்சி உள்ளது என்பதை தமிழக மக்கள் உணரத் தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அகற்றப்படும் என்பதை கெட் அவுட் ஸ்டாலின் ஹேஸ்டேக் வெளிப்படுத்துவதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.