மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஎஸ்சி பள்ளிகள் தொடங்கலாம் என்று மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு நவம்பர் 29-ம் தேதி இணைப்புக்குழு அளித்த பரிந்துரைகளுக்கு டிசம்பர் 26-ம் தேதி நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்ததிருந்தது. முன்பு சிபிஎஸ்சி பள்ளி தொடங்குவதற்கு மாநில அரசின் தடையின்மைச் சான்று தேவை என்ற நிலையில் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அங்கீகாரம் கோரி நேரடியாக மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுப்பதில் ஆட்சேபனை உள்ளதா என மாநில கல்வித்துறையிடம் மத்திய அரசு கருத்து கேட்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.