பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தின் பலன்கள் என்ன? - சிறப்பு தொகுப்பு!
Oct 28, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தின் பலன்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 22, 2025, 06:02 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசிய கல்விக் கொள்கையின் படி மும்மொழிக் கொள்கையில் இந்தி கட்டாயமல்ல என தெரிவித்த பின்பும் பி எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை தமிழக அரசு ஏற்க மறுப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் என்றால் என்ன ? அதனால் ஏற்படும் பயன்கள் என்ன ? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

சமக்ர சிக்‌ஷா அபியான் எனும் ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டம் அறிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் 14 ஆயிரத்து 500 பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை உருவாக்க முதற்கட்டமாக 27 ஆயிரத்து 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளைப் போல மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல்,

அரசுப்பள்ளிகளை தேர்ந்தெடுத்து உட்கட்டமைப்பை வலுப்படுத்திய பின் மீண்டும் மாநில அரசிடம் ஒப்படைப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களான மும்மொழிக் கொள்கை, பன்னிரெண்டாம் வகுப்பில் பொதுத்தேர்வு உள்ளிட்டவைகோடு தரமான கல்வி இலவசமாக வழங்கப்படும்.

அடிப்படைக் கல்வியாக KG, LKG, UKG, ஒன்று, இரண்டாம் வகுப்புகளின் பாடங்கள் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்படும். 3 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு விளையாட்டு அடிப்படையில் கல்வி முறை அமைந்திருக்கும்.

6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு கணினி திறன்களை வளர்க்கும் வகையில் பாடங்கள் வடிவமைக்கப்படும். 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் தொழிற்கல்வி மற்றும் விரும்பிய பாடத்தை தேர்ந்தெடுத்து கற்கும் வசதி இடம்பெற்றிருக்கும்

கல்வி முறைகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகள், அறிவியல், கணினி ஆய்வக வசதி, நூலகம், ஸ்மார்ட் வகுப்பறைகளும் பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் சிறப்பு அம்சங்கள். நீர் பாதுகாப்பு, கழிவு மறு சுழற்சி, மின்சார கட்டமைப்பு, இயற்கை வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் பசுமைப் பள்ளிகளாகவும் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் உருவாக்கப்படும்.

மும்மொழிக் கொள்கையில் இந்தி கட்டாயமல்ல என மத்திய அரசு தெரிவித்த பின்பும் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் எனும் பெயர் இருப்பதால் மட்டுமே இத்திட்டத்தை மாநில அரசு ஏற்க மறுப்பது ஏன் ? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்

ஹைடெக் கட்டமைப்புடன் தரமான கல்வி வழங்கும் நோக்கில் கொண்டுவரப்படும் பள்ளியை தடுப்பதற்கு பின் தமிழக அரசின் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

Tags: Hindi is not mandatoryPM Sri Schools schemdmk govenment opposeSamagra Shiksha Abhiyan.tamil nadu governmentNational Education Policy
Share
Tweet
SendShare
Previous Post

உலக தாய்மொழி தினம் : தாய்மொழி காப்பதே தலையாய கடமை!

Next Post

மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஎஸ்சி பள்ளிகள் தொடங்கலாம் – மத்திய இடைநிலை கல்வி வாரியம்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies