கடலூரில் முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே பொதுமக்கள் வெளியேறியதால் பெரும்பாலான இருக்கைகள் காலியாக கிடந்தன.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேன் மற்றும் பேருந்துகள் மூலம் பொதுமக்கள் அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.
அவ்வாறு அழைத்து வரப்பட்ட மக்கள், நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினர். இதனால் விழா அரங்கத்தில் இருந்த பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே காணப்பட்டன.
மேலும், விழா நுழைவாயிலில் கட்டப்பட்டிருந்த பழங்கள் காய்கறிகள், இளநீர், கரும்பு உள்ளிட்டவைகளை பொதுமக்கள் போட்டி போட்டு எடுத்துச் சென்றனர்.