சேலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரை திருடன் என நினைத்து சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலாஜி நகர் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஒருவர புகுந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் அந்த நபரை பிடித்து சரமாரியாக அடித்ததாக தெரிகிறது.
இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த சங்கர் என்பதும், கடந்த 20 ஆண்டுகளாக அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.