தமிழக அரசின் திட்டங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசு 12 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் நடைபெற்றது . இதில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி ராமலிங்கன் கலந்து கொண்டு பட்ஜெட்டில் உள்ள சிறப்புகள் குறித்து விளக்கினர்.
பிரதமர் மோடியின் முதல் நிதி அறிக்கையான 2014 நாட்டிற்கு டிஜிட்டல் இந்தியா திட்டம் 36 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாகவும் , தற்போது டிஜிட்டல் இந்தியாவால் இந்தியா இயங்குவதாக தெரிவித்தார்.
தற்போது பிரதமர் மோடி அரசு 11 வது நிதி நிலையை தாக்கல் செய்துள்ளதாகவும் , அதில் ஒரு நிதிநிலை அறிக்கை கூட தேர்தல்க்கான நிதிநிலை அறிக்கை கிடையாது என்றும் , நநூற்றாண்டு சுதந்திர தினம் கொண்டாடும் 2047 ம் ஆண்டு இந்தியாவை வல்லரசாக நிறுத்துவதற்காக கட்டமைப்பை உருவாக்குவது தான் பிரமரின் லட்சியம் என்றார்.
தமிகத்திற்கு 3 ஆண்டுகளில் ரூ.12.63 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும், தமிழக சுகாதாரத்துறைக்கு 86% சதவீத நிதியை மத்திய அரசு வழங்குவதாகவும் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.