நாகை – இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது.
நாகை – காங்கேசன் துறைமுகம் இடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில், வடகிழக்கு பருவமழையின் காரணமாக சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நாகை துறைமுகத்தில் இருந்து இரண்டரை மாதங்களுக்கு பிறகு இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கியது. யாழ்ப்பாணம் துணை தூதர் நடராஜன் மற்றும் சுங்கதுறை அதிகாரிகள் கொடியசைத்து கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தனர்.
82 பயணிகளுடன் காங்கேசன்துறைமுகம் நோக்கி கப்பல் சென்றது. செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் கப்பல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் புறப்படும் கப்பல் சுமார் 4 மணி நேரத்தில் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு சென்றடையும்.