தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வடக்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகளின் ஆலோனை கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் கலந்துகொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வைகை அணை பூங்காவில் உள்ள படகு குழாம் மற்றும் சிறுவர் ரயிலை தனியாருக்கு விட பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
தமிழக அரசின் கீழ் உள்ள பொதுப்பணிதுறையே பூங்காவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.