இலங்கையில் ரயில் மோதியதில் 6 யானைகள் உயிரிழந்தனர்.
இலங்கையின் வட மத்திய மாகாணத்தில் உள்ள மின்னேரியா தேசிய பூங்காவில் ஏராளமான யானைகள் உள்ளன. அந்த பூங்காவை ஒட்டியுள்ள ரயில் பாதையில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணிகள் ரயில் சென்றது.
அப்போது, அந்த வழித்தடத்தை கடக்க முயன்ற யானை கூட்டத்தின் மீது மோதி பயணிகள் ரயில் தடம்புரண்டது. இந்த விபத்தில் நான்கு குட்டி யானைகள் உட்பட ஆறு யானைகள் உயிரிழந்தன. ரயில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.