உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளா 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளா ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கிய நிலையில், வருகிற 26-ம் தேதிவரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், மகா கும்பமேளா 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் ஈட்டும் என இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மகா கும்பமேளாவுக்கு மக்கள் வருகை தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
3 லட்சம் கோடி வர்த்தகம் ஈட்டப்பட்டால் இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார நிகழ்வுகளில் ஒன்றாக கும்பமேளா அமையும் எனவும் கூறியுள்ளார்.