தமிழகத்தில் விரைவில் டபுள் எஞ்சின் சர்க்கார் வரும் எனவும் அப்போது மக்களுக்கு தேவையான அனைத்து வளர்ச்சி திட்டங்களும் செய்து கொடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர்
தமிழ்நாட்டிற்கு கடந்த 2014 ம் ஆண்டு முதல் தற்போது வரை 11 இலட்சம் கோடி ரூபாய் வளர்ச்சிக்கு என மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, காசி தமிழ் சங்கம், தமிழ் கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்திற்கும் பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என தெரிவித்தார்.
ஹரியனா, உத்தரபிரதேசம், டெல்லி உட்பட மாநிலங்களில் டபுள் இன்ஜின் அரசால் மாநிலம் வளர்ச்சி பெற்று வருகிறது, தமிழகத்தில் கூடிய விரைவில் டபுள் இன்ஜின் சர்க்கார் வரும், அப்போது அனைத்து வளர்ச்சிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என எல். முருகன் உறுதியாக தெரிவித்தார்.
சென்னையில் உள்ள கூவத்தை சிங்காரச் சென்னையாக மாற்றுவோம் என திமுக கூறி வருகிறது ஆனால் ஒன்றுமே செய்யவில்லை. புதிய தேசிய கல்விக் கொள்கை என்பது தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மூன்றாவது மொழி இந்தி கட்டாயம் என எங்கும் சொல்லவில்லை, வேறு ஒரு மொழியை கற்கலாம் என தெரிவித்தார்.
அரசியல் விளையாட்டால் ரூ.5 ஆயிரம் கோடி தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, மக்களை திசை திருப்பாமல், முதலமைச்சரும், கல்வி அமைச்சரும் மாணவர்களின் கல்வியில் விளையாடக்கூடாது என தெரிவித்தார்.
1965 ம் ஆண்டு போல் நினைக்க வேண்டாம், இன்றைய காலத்தில் உள்ள இளைஞர்கள் முன்னேற்றத்திற்காகவர்கள், மோடி அவர்களின் பாரதத்தை விரும்புகின்ற இளைஞர்கள்,
வளர்ச்சியடைந்த பாரதத்தை 2047-ல் உருவாக்க நினைக்கும் இளைஞர்களை பின்னோக்கி இழுக்க வேண்டாம் என்றும் என் குழந்தை மும்மொழிக் கொள்கையால் 3-வது மொழியை கற்கக்கூடாதா? என எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.