காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று இன்று அதிகாலை ஏராளமான மீனவர்கள் கரை திரும்பிய நிலையில் வஞ்சிரம், வவ்வால், சங்கரா, வெள்ளை பாறை, தோல் பாறை, பால் சுறா, ஷீலா, மயில் கோலா, உள்ளிட்ட பெரிய வகை மீன்களின் வரத்து அதிகமாகவே இருந்தது. விலை குறைவால் குறைந்த விலையில் மீன்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
அதேபோல் குறைந்து தூரம் சென்று பைபர் படகு மூலம் பிடித்து வரப்படும் சிறிய வகை மீன் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் இந்த வாரம் சில்லறை விற்பனை கடைகள் அதிகமாகவே காணப்பட்டது
மீன்களில் விலை (ஒரு கிலோ)
வஞ்சிரம் -800
கொடுவா 600
ஷீலா 500
பால் சுறா 500
சங்கரா 600
பாறை 500
இறால்-400
நண்டு -300
நவரை -300
பண்ணா-300
காணங்கத்தை -300
கடுமா- 300
நெத்திலி,-200