தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் 80 சதவீத மாணவர்களுக்கு தமிழை முறையாக எழுத தெரியவில்லை என தமிழக மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக சிறப்பு தலைவர் மணிவாசகன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழககத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மணிவாசகன், அரசு மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் 80 சதவீத மாணவர்களுக்கு தமிழை முறையாக எழுத தெரியவில்லை என கூறினார்.
தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்கள் 3வது மொழியை படிப்பது சிரமம் என தெரிவித்துள்ள மணிவாசகன், தமிழ் மொழி சார்ந்து எந்தவொரு நடவடிக்கையும் பள்ளிகளில் எடுக்கப்படுவதில்லை என கூறினார்.