சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் 5-வது லீக் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது.
அந்த அணி சார்பில் அதிகபட்சமாக சௌத் சக்கீல் 62 ரன்களும், முகமது ரிஸ்வான் 46 ரன்களும், குஷ்தில் ஷா 38 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.