வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக எந்தவொரு நிதியும் அமெரிக்காவிடம் இருந்து பெறப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி அமைப்பு இந்தியாவிற்கு ஒதுக்கிய 182 கோடி ரூபாய் நிதி உதவியை ரத்து செய்தது.
இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக US-AID சார்பில் இந்த நிதி வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் மத்திய அரசுடன் இணைந்து அமெரிக்க அமைப்பு 7 திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 2023-24ஆம் நிதியாண்டில் 825 கோடி ரூபாய் நிதியை US-AID அமைப்பு விடுவித்ததாக தெரிவித்துள்ள மத்திய அரசு, வேளாண்மை, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு மட்டுமே இந்த நிதி பயன்படுத்தப்பட்டதாக விளக்கமளித்துள்ளது.
மேலும், வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக எந்தவொரு நிதியும் அமெரிக்காவிடம் இருந்து பெறப்படவில்லை எனவும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.