நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகளுக்கு 19-வது தவணையாக 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார்.
விவசாயிகளின் பயிர் செலவுக்கு உதவும் வகையில் பிரதமரின் கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். அதன்படி, நாடு முழுவதும் உள்ள சுமார் 11 கோடி சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஆறாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.
4 மாதங்களுக்கு ஒருமுறை 2 ஆயிரம் ரூபாய் வீதம் 3 தவணைகளாக இந்த தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகளுக்கு 19-வது தவணையாக 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.
இதற்காக, பீஹார் மாநிலம் பாகல்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில், 22 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்க உள்ளார்.