உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஒவ்வொரும் தலா 10 பேரை பரிந்துரைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி உடல்பருமனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
அதன்படி, உடல் பருமனுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தவும், உணவில் சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது குறித்த விழிப்புணர்வைப் பரப்பவும் 10 பேரை பிரதமர் மோடி பரிந்துரைத்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, நடிகர்கள் மோகன்லால், மாதவன், நடிகை தீபிகா படுகோன், பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல் உள்ளிட்ட 10 பேரை எக்ஸ் பக்கத்தில் டேக் செய்துள்ள பிரதமர் மோடி, இந்த 10 பேரும் தலா 10 பேரை பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.