தெலங்கான மாநிலம் ஹைதராபாத்தில் காகித தட்டு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
குகட்பள்ளி பகுதியில் செயல்படும் தனியார் காகித தட்டு தயாரிக்கும் நிறுவனத்தின் உற்பத்தி அலகில் இருந்து பெரும் தீப்பிழம்புகள் வெளியேறியது.
இதையடுத்து,தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.